சகதியாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி: பட்டாபிராம் கோபாலபுரத்தில், ஆவடி மாநகராட்சி சார்பில் ஆறு மாதங்களுக்கு முன் மெட்ரோ குடிநீர் பணி நடந்தது. இதனால், கான்கிரீட் சாலை தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறியது.

பணிகள் முடிந்த பகுதிகளில் பள்ளத்தை சரியாக மூடாததால் கனரக வாகனங்கள், கழிவுநீர் ஊர்திகள், '108' எனும் அவசர கால வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் பெய்த கனமழையில், சாலை சகதியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement