இன்று கல்வி கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில், 2026 - 27 கல்வி ஆண்டில், 7,592 மாணவ, மாணவியருக்கு 130 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை, 10:00 மணிக்கு, காகாபாளையம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லுாரியில் கல்வி கடன் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்பெறலாம். இதில் கல்வி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல், விண்ணப்ப பதிவு உதவிகள் வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மாணவர்கள், புதிதாக கல்வி கடன் பெற விரும்புவோரும் பங்கேற்கலாம். கூடுதல் தகவலுக்கு, கலெக்டர் அலுவலக அறை எண்: 4ல் நேரில் அணுகலாம். 0427 - 2215106 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என, கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
-
விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் விதித்தது ஈரான்
-
தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
Advertisement
Advertisement