மத்திய அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது: ராகுல் ஆரூடம்
சங்ரூர்: பஞ்சாப் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடப்பதை முன்னிட்டு சங்ரூர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதாவது: போதை மருந்தை ஒழிக்க எத்தனை ஆண்டுகளை அமித்ஷா காலக்கெடு வைத்துள்ளார்.மூன்று ஆண்டுகளா? மூன்று ஆண்டுகளில் அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்க மாட்டார். எனது கணிப்புப்படி, மத்திய அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது. எப்படியிருந்தாலும், போதை மருந்து பிரச்னையை மூன்று ஆண்டுகளில் ஒழித்துவிடுவேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இங்குள்ள மக்களுக்கு, பஞ்சாபிற்காக உழைக்கும் அரசு தேவை. இங் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு டில்லியில் இருந்து இயக்கப்படாது. மத்திய உள்துறை அமைச்சரோ, டில்லியின் முன்னாள் முதல்வரோ இயக்க மாட்டார்கள்.
தற்போதைய சூழலில் பஞ்சாப் அரசின் கடிவாளம் பாதியளவு அமித்ஷாவின் கையிலும், பாதியளவு கெஜ்ரிவாலின் கையிலும் உள்ளது. பகவந்த் மன் வெறும் பார்வையாளராக உள்ளார். பஞ்சாப் டில்லியில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறது.
லோக்சபாவில், முதல்வர் பக்வந்த் மன் உடன் அமர்ந்துள்ளேன். அவர் எங்கள் அருகில் அமர்ந்து பேசுவார். காலை 11 மணியளவில் அவரிடம் இருந்து மதுபான வாசனை வரும். பகவந்த் மன் மது அருந்தக்கூடாது எனக்கூறவில்லை. அத அவரின் தனிப்பட்ட விஷயம்.
போதை மருந்துக்கு எதிராக உண்மையாக போராட வேண்டும் என்றால், முதல்வர் மதுபானங்களின் பிடியில் இருக்கக்கூடாது. பஞ்சாபுக்காக போராடக்கூடிய, உங்களின் வேதனைகளை புரிந்து கொள்ளக்கூடிய நபர் தேவை. இவ்வாறு ராகுல் பேசினார்.
வியட்நாம் ஜோசியர் கிட்ட ஆருடம் கேட்டு வந்து விட்டார்!
இன்னும் ஓரிரு ஆண்டில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே காணாமல் போகும். சோனியா குடும்பத்தினர் இத்தாலி போகும்.
இதையே 2126ம் ஆண்டிலிம் உளறுவார்
ராகுல் ஜெயிச்ச தொகுதிக்கு இதுவரை என்ன நல்லது பண்ணிருக்கு. ஆயுசு முழுவதும் அடுத்தவனின் அந்திய தேச விரோதிகளின் கை புள்ளயாய் அலையும் உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது.மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு