கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மாற்று இடம் தேர்வு

செய்யூர்: ஆத்துாரில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, பெரியவெளிக்காடு கிராமத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

செய்யூர் அடுத்த பெரியவெளிக்காடு கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் மதுராந்தகம் –கடலுார் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், அரசுக்கு சொந்தமான 7.26 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆத்துார் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மேயக்கால் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு மாற்று இடமாக பெரியவெளிக்காடு கிராமத்தில், 3 ஏக்கர் பரப்பளவு இடத்தை வருவாய் துறையினர் நேற்று அளவீடு செய்தனர். அப்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

Advertisement