மாமியாரை தாக்கிய மருமகளுக்கு வலை

விருத்தாசலம்: மாமியாரை தாக்கிய மருமகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோ.ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மனைவி சகுந்தலா,59. இவரது மகன் கலைமணி. இவர் தனது மனைவி கொடியரசியை கடந்த 2ம் தேதி குடித்துவிட்டு அசிங்கமாக திட்டி தாக்கினார்.

இதன் காரணமாக, நேற்று கொடியரசி, சகோதரர் சேகர் ஆகிய இருவரும் கலைமணி, தாய் சகுந்தலா ஆகியோரை திட்டி தாக்கினர். கம்மாபுரம் போலீசார் கொடியரசி, சேகர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement