தந்தைக்கு அடி, உதை மகன் தலைமறைவு

குமாரபாளையம்:குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; இவர், பவானி கூடுதுறை கோவிலில், யாசகம் பெற்று மது குடித்து வந்தார். இவரது மனைவி செல்லம்மாள், 62. இவர்களுக்கு பூபதிராஜா, 27, என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம், மது போதையில் வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி, மனைவி செல்லம்மாளை தாக்கியுள்ளார்.

தகவலறிந்து வந்த மகன் பூபதிராஜா, தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரையும் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபதிராஜா, தந்தை சுப்பிரமணியை, நெஞ்சு, முதுகில் தாக்கியுள்ளார். இதில் மயங்கிய சுப்ரமணியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை தாக்கிவிட்டு தலைமறைவான பூபதிராஜாவை தேடி வருகின்றனர்.

Advertisement