மாணவர் விடுதியில் 'பாட்டில்' விடுதி காப்பாளர் 'சஸ்பெண்ட்'

மோகனுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுார் வளையப்பட்டி சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு சமூக நீதி கல்லுாரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில், நாமக்கல் கலெக்டர் மதுபாலன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், காலி மது பாட்டில்கள் கிடப்பதை கண்டுபிடித்தார். மேலும், அரிசி கையிருப்பில், 70 கிலோ அளவுக்கு பற்றாக்குறையாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து விடுதி காப்பாளர் சிவக்குமாரிடம், விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், போதை பொருட்கள் பயன்படுத்தியதை கண்காணிக்க காப்பாளர் தவறிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, விடுதி காப்பாளர் சிவக்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் மதுபாலன் உத்தரவிட்டார்.

Advertisement