விடுதலை நாள் குறித்து விழிப்புணர்வு: மாஜி எம்.பி., வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சி தலைவர் ராமதாஸ் அறிக்கை:

புதுச்சேரிக்கு விடுதலை பெற்றுத் தந்த தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா அமையவில்லை.

புதுச்சேரியின் விடுதலை வரலாறு குறித்து பெரும்பாலான மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தவறிவிட்டது.

எதிர்காலத்திலாவது புதுச்சேரி அரசு, புதுச்சேரியின் விடுதலை வரலாறு குறித்த கட்டுரை ஒன்றைத் தயாரித்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதன் மூலம் மக்களிடையே விடுதலை வரலாறு குறித்த விழிப்புணர்வையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்திய பின்னரே விடுதலை நாள் விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement