இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க ஆலோசனை தீவிரம்; நெதன்யாகு ஆட்சி மீண்டும் அமையுமா?

-நமது நிருபர்-

இஸ்ரேலில், கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. பிரதமர் நெதன்யாகு தலைமையிலான 'லிகுட்' கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அவரது கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சி கூட்டணி, 48 இடங்களையும், அரபு கட்சிகள் கூட்டணி, 19 இடங்களிலும் வென்றன. எந்தக் கூட்டணிக்கும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஓட்டு திருட்டு, தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது.

தேர்தலின் முடிவுகளை அதிபர் ஐசக் ஹெர்சாகிடம் தேர்தல் கமிஷன் சமர்ப்பித்தது. தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபர் ஹெர்சோக் ஆலோசனைகளை துவக்கியுள்ளார்.

மீண்டும் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement