‘தினமலர் – பட்டம்’ இதழ் வினாடி–வினா போட்டி
விழுப்புரம்: ‘தினமலர் – பட்டம்’ இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், ‘பதில் சொல் ; பரிசு வெல்’ வினாடி–வினா போட்டி, விழுப்புரம் அருகே பூத்தமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த போட்டியில், அந்த பள்ளியின், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 16 மாணவர்கள் தேர்வு செய்து, அவர்கள் 8 குழுக்களாக பிரித்து, 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இந்த போட்டியின் நிறைவாக, 8 ம் வகுப்பு மாணவிகள் திவ்யபாரதி, சுவதி ஆகியோர் முதலிடத்தையும், 8 ம் வகுப்பு மாணவிகள் தனுஷா, ஓவியா ஆகியார் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த மாணவிகள் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு, விழுப்புரம் சரஸ்வதி கல்விக்குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர் முன்னிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
-
விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் விதித்தது ஈரான்
-
தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
-
சீன உளவாளியுடன் ரகசிய தொடர்பு; என்விடியா சி.இ.ஓ., பதவி பறிப்பு?