மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

கரூர்:கரூர் ராமகிருஷ்ணபுரம் பி.கே.ஜி., ஸ்டோர் பகுதியை சேர்ந்த கார்த்திக், 30. எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார்.

கடந்த, 9-ம் தேதி மாலை 6:30 மணியளவில், திருவள்ளுவர் நகர், 3-வது தெருவில் உள்ள முருகேசன் என்பவரின் வீட்டில், மின்சாரம் தொடர்பான பணியில் கார்த்திக் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, கார்த்திக் மனைவி பிலோமினா அளித்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement