தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
கடலுார்: பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வரும் 16 ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தொழிற் பழகுனராக சேர மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் கடலுார், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 16ம் தேதி திங்கள்கிழமை காலை 9:00 மணி முதல் நடக்கிறது. இம்முகாமில் கடலுார் மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுனர் காலி இடங்களை நிரப்ப உள்ளனர்.
இப்பயிற்சிக்கு தகுதிக்கேற்ப மாதாந்திர உதவித் தொகையாக 6500 ரூபாய் முதல் 20,600 ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கடலுார் என்ற முகவரி அல்லது 94990 55861, 99943 96444 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
-
குழாய் உடைந்து சேதம்: வீணாகி வரும் குடிநீர்
-
ஆமை வேகத்தில் வடிகால் பாலம் பணி சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
-
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தேர்வு
-
ஜல்லி பெயர்ந்ததால் பாடாவதியான சாலை வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
-
ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்