உண்டியல் திருட்டு இரண்டு பேர் கைது

திண்டிவனம்: கோவில் உண்டியலை திருட முயன்று இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள ஈச்சேரி பஸ் நிறுத்தம் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக சிவலிங்கம், 30; உள்ளார். கோவிலில் கடந்த 10 ம் தேதி இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து திருட முயன்றனர்.

இதைப்பார்த்த பூசாரி பொது மக்கள் உதவியுடன் இரண்டு பேரையும் பிடித்து ஒலக்கூர் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த காளி மகன் சிவப்பிரகாஷ், 31; மற்றும் அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் பிரபாகரன், 30; என்று தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement