சிறுமி மாயம்
புதுச்சேரி: பள்ளிக்கு சென்ற சிறுமி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகரை சேர்ந்தவர் அழகர் மகள் தீப்தி,13; இவர் லாஸ்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று (10ம் தேதி) பள்ளிக்கு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த, அவரது பெற்றோர், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் பாக்கிலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement