1.65 லட்சம் பேருக்கு கேக் வழங்க நடவடிக்கை
ஈரோடு:வரும்,
14ல் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில், அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என, 61.84 லட்சம் பேருக்கு கேக்
வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், 1,394 பள்ளிகளில்
படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத
பணியாளர்கள் என அனைவருக்கும், 21.6 கிராம் எடை கொண்ட இரண்டு கேக்
பாக்கெட் வழங்கப்படுகிறது. இவை முறையாக பேக்கிங் செய்து, இன்றும்,
நாளையும் அந்தந்த பள்ளிகளுக்கு வந்தடையும். குழந்தைகள் தினமான
வரும், 14 அன்று காலை கேக் வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஈரோடு,
கங்காபுரம், பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம்
என, ஏழு இடங்களில் குடோன் அமைத்து, கேக்குகளை இருப்பு வைத்து,
அங்கிருந்து அருகே உள்ள பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி அனுப்பி
வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதல்வரின் வாழ்த்து அட்டை
மறைந்த
முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் நவ.,14ல், குழந்தைகள் தினமாக
கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தில் அரசு, அரசு
நிதியுதவி பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ,
-மாணவியருக்கு முதல்வரின் கையெழுத்துடன் கூடிய வாழ்த்து அட்டை
வழங்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 1 லட்சத்து, 55
ஆயிரத்து, 687 மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, முதல்வரின்
கையெழுத்துடன் கூடிய வாழ்த்து அட்டை பார்சல், 96 பண்டல்களாக நேற்று
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்துள்ளது.
14ல் பள்ளி விடுமுறை என்பதால், 13ல்
மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
-
குழாய் உடைந்து சேதம்: வீணாகி வரும் குடிநீர்
-
ஆமை வேகத்தில் வடிகால் பாலம் பணி சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
-
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தேர்வு
-
ஜல்லி பெயர்ந்ததால் பாடாவதியான சாலை வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
-
ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்