ஈரோட்டில் நாளை கோட்ட அளவிலான வேளாண் கூட்டம்

ஈரோடு:ஈரோடு, மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முத்துசாமி தலைமையில் நாளை (13) காலை, 11:00 மணிக்கு கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய நான்கு தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனு வழங்கி தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement