சூதாட்டம் ஆடிய 5 பேருக்கு காப்பு

ஈரோடு:சிவகிரி, ஆயப்பரப்பு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மொபைல் போன் டவர் அருகே, நேற்று முன்தினம் சிலர் பணம் வைத்து, சூதாட்டம் ஆடி கொண்டிருந்தனர்.

சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டுபுதுார் அரிஜன காலனி மணிகண்டன், 46, கொளாநல்லி அண்ணமார் கோவில் வீதி பொன்னுசாமி, 56, புதுச்சேரி கீழ்அக்ரஹாரம் வினோத் குமார், 36, மணக்காட்டூர் ஆறுமுகம், 51, மின்னபாளையம் பாப்பாவலசு சரவணன், 53, ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Advertisement