3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியானது பிரேத சோதனையில் உறுதி
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்து பலியான, ஒப்பந்த ஊழியர்கள் மூவரும், விஷவாயு தாக்கியதே, உயிரிழப்புக்கு காரணம் என, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரத்தில், ஐபோன் மொபைல் உதிரிபாகம் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை உள்ளது. அங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய, ‘நால்கோ வாட்டர்’ நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டது. அதன்படி அந்நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களான தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியை சேர்ந்த சாரதிகுமார், 25, பஞ்சப்பள்ளி தின்னுாரை சேர்ந்த அக்மல், 28, ஜம்பூத் பகுதியை சேர்ந்த காவேரி, 31 ஆகியோர் கடந்த, 9ல், தொழிற்சாலையிலுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தனர். அப்போது மயங்கி தொட்டிக்குள் விழுந்து பலியாகினர்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்படி, நேற்று முன்தினம் இரவே, பலியான மூன்று தொழிலாளர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 3 பேரும் விஷவாயு தாக்கி பலியானது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்