பர்கூர் ரிசார்ட்டில் தங்கியவர் ரத்த வாந்தி எடுத்து சாவு
அந்தியூர்: பர்கூர் ரிசார்ட்டில் தங்கியவர், ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
ஈரோடு, வில்லரசம்பட்டி அடுத்த பாரதியார் நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 55, பிளீச்சிங் தொழில் செய்து வந்தார். இவரும், இவரது உறவினரான கிருஷ்ணமூர்த்தியும், 58; கடந்த, 10ம் தேதி, ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூரில் உள்ள பழனிசாமி ரிசார்ட்டில் தங்கினர்.
நேற்று (நவ.,10) இரவு, இருவரும் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். இன்று (நவ.,11) காலை எழுந்த மாதேஸ்வரன், காலைக்கடன் கழிக்க கழிப்பிடம் சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, ரத்த வாந்தி எடுத்து மாதேஸ்வரன் இறந்து கிடந்தார்.
புகாரின்படி, பர்கூர் போலீசார் மாதேஸ்வரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.