போலி நூல் கொள்முதலில் யார் யாருக்கு தொடர்பு? வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: நூலகங்களில் போலி நூல் கொள்முதல் ஊழலின் மொத்த மதிப்பு என்ன? யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; கோவை ஈவெரா அறிவுலகத்திற்கு நூல்களை வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக தினமும் வெளியாகி வரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. நூல் கொள்முதலில் கூட ஊழல் செய்வார்களா? என நாடு முழுதும் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது குறித்த அனைத்து உண்மைகளையும் வெளியிட்டு, ஊழல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்ட போதிலும், இந்த ஊழல் தொடர்பாக ஒரு தகவலும் வெளியாகவில்லை. எப்ஐஆர் கூட இன்னும் பதிவாகவில்லை.
நூல்கள் கொள்முதல் செய்ததில் மட்டுமில்லாமல், நூலகங்கள் கட்டப்பட்டதிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கலாம் என்று குற்றம்சாட்டு எழுந்துள்ளன. இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களை தப்ப விடக்கூடாது.
இந்த ஊழலால் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதைத் துடைக்க ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.
தரமற்ற போலி நூல்களை கொள்முதல் செய்து அறிவை மழுக்கடிக்கும செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. தமிழகத்தில் எந்தெந்த நூலகங்களுக்கு அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன?அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காக பரிந்துரைத்தவர்கள் யார்? உள்ளிட்ட முழு விபரங்களையும் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி