25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1999ல், 10ம் வகுப்பு, 2001ல், பிளஸ் 2 படித்த, முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து, பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
முன்னதாக பள்ளி நுழைவாயிலில் இருந்து, அப்போதைய பள்ளி ஆசிரியர்கள், 9 பேருக்கு மாலை அணிவித்து, மேள தாளம் முழங்க, அழைத்து வரப்பட்டனர். முன்னாள் மாணவ, மாணவியர், இருப்பிடம், குடும்பம், வேலை உள்ளிட்டவை குறித்து பகிர்ந்துகொண்டனர். ஆசிரியர் - முன்னாள் மாணவ, மாணவியர் கலந்துரையாடலும் நடந்தது.
பின் ஆசிரியர்களை கவுரவித்து, நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் கவுதம், ஆசிரியர்கள் ஜெய்கணேஷ், பிரபாகரன் உள்ளிட்டோர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவ, மாணவியர் கூறுகையில், 'பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு
செய்துள்ளோம்' என்றார்.