அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
சேலம்: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில், 13ம் ஆண்டாக, 63 நாயன்மார் திருவீதி உலா நேற்று நடந்தது.
இதை ஒட்டி காலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாதர் ஆகிய மூலவர் திருமேனிகளுக்கு அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. தொடர்ந்து, கரூர் குமாரசாமிநாத தேசிகர் குழுவினர், சிவ பக்தர்களின் திருமுறை இன்னிசையுடன், 63 நாயன்மார்களின் உற்சவ திருமேனிகளுக்கு, பால், தயிர், சந்தனம் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால், பெருந்திருமஞ்சனம் செய்யப்பட்டது. மதியம், பேரொளி வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாதர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் உள்பட, 63 நாயன்மார்களும் சர்வ அலங்காரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியே, 'உலா' வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு அன்னதானம்
வழங்கப்பட்டது.
மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி
-
போலீஸ் ஸ்டேஷனில் 3 காதல் ஜோடி தஞ்சம்