வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிச., 9ல் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு, நாளை காலை, 7:00 முதல், 8:00 மணிக்குள் முகூர்த்தக்கம்பம் நடப்பட்டு, திருவிழா ஏற்பாடு தொடங்க உள்ளது.
அன்று கார்த்திகை தீபத்திருவிழா என்பதால், இரவு, 7:00 மணிக்கு, கோவில் எதிரே கல்துாணில் திருக்கோடி ஏற்றி, சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
டிச., 10 முதல், பகல்பத்து உற்சவம் தொடங்கி, 19ல் மோகினி அலங்காரத்துடன் முடியும். 20 அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று முதல், 'ராப்பத்து' உற்சவம் தொடங்கி, 30ல் சொர்க்கவாசல் திருக்காப்பிடலுடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

Advertisement