பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த, உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்துக்கு,

200 பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு மேற்கொள்ள, மீன் குஞ்சுகள், மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள், பறவை தடுப்பு வசதிகள் ஆகிய இடுபொருட்களை கொள்முதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் மாவட்டத்தில், 5 பயனாளிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 250 முதல், 1,000 ச.மீ., வரை நீர் பரப்பளவுள்ள பல்நோக்கு பண்ணை
குட்டைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்ள, இடுபொருட்கள் கொள்முதல் செய்ய, ஒரு அலகுக்கு ஆகும் மொத்த செலவினத்தொகை, 40,000 ரூபாயில், 50 சதவீதம் மானியமாக, அதாவது ஒரு பண்ணை குட்டைக்கு, 20,000 ரூபாய் பெறலாம்.
விரும்புவோர், 'மீன்
வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மேட்டூர் அணை பூங்கா அருகே, கொளத்துார் பிரதான சாலை, மேட்டூர் அணை' என்ற முகவரியில் அணுகலாம். 04298 - 244045, 89400 - 00482 என்ற எண்களிலும் அழைக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், நில ஆவணம், ஆதார், ரேஷன் கார்டுகள், மார்பளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை இணைந்து, வரும் டிச., 4 மாலை, 4:00 மணிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என, கலெக்டர் இளம்
பகவத் தெரிவித்துள்ளார்.

Advertisement