போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
- நமது டில்லி நிருபர் -
டில்லியில் பாஜ தலைமையகத்தில் செய்தியாளர்களுக்காக 'தீபாவளி மிலன்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: செய்தித்தாள் அச்சுக்குச் செல்வது முதல், ஒரு செய்தியை ஒளிபரப்புவது வரை, அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. இந்தக் காலக்கெடு இல்லையென்றால், செய்தி அறையில் இருப்பவர்கள் முதல் களப்பணியாளர்கள் வரை, 'இன்னும் நேரம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்', 'பிறகு செய்து கொள்ளலாம், என்ன அவசரம்? முன்பே சமாளித்திருக்கிறோம். இப்போதும் சமாளித்துவிடலாம்' என்று அலட்சியமாக இருக்கக்கூடும். அதனால்தான் காலக்கெடு மிகவும் முக்கியமானது.
இது தனிநபருக்கும், நிறுவனத்திற்கும், ஏன் ஒரு நாட்டிற்கும் கூட பொருந்தும். இன்று, நம் நாடும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் 2047ம் ஆண்டு. இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்தே நம்மிடம் உள்ளது. இப்போது, நம் முன்னால் இலக்கை அடைய ஒரு குறிப்பிட்ட ஆண்டு உள்ளது. அது 2047. 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக நாம் அனைவரும் இணைந்து மாற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நீண்ட கால தொடர்பு
நான் ஊடகங்களுடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்து வருகிறேன்; செய்தி அறிக்கைகள் (press releases) வழங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காலம் வரை ஊடகங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். செய்தித் துறையில் சாத்தியமற்றது என்று எதுவுமே இல்லை.
நெருக்கடியான காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் கூட நமது களப்பணியாளர்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடைகிறார்கள். சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கும், தேசிய ஒற்றுமை தொடர்பான செய்திகளுக்கும் ஊடகங்கள் முன்னுரிமை அளித்தால், வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணம் இன்னும் வேகமெடுக்கும்.
விழிப்புணர்வு
போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய ஊடகங்கள் நாட்டின் வெற்றிச் கதைகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; ஏற்கனவே இது போன்ற பல நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகளின் பன்முகத்தன்மை தான் நமது ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
இதில் இந்திய ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஊடகங்களுக்கு எனது ஒரு வேண்டுகோள் உள்ளது; 21ம் நூற்றாண்டில் தகவல் தொடர்பு என்பது மிக வலிமையான கருவியாகும். கடந்த 25 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாடும் மாறியுள்ளது, உலகமும் மாறியுள்ளது; அரசியலை முன்னெடுக்கும் விதமும் மாறியுள்ளது.
நிபுணர்கள்
தொழில்நுட்ப மாற்றங்கள் ஊடகச் சூழலையும் பெருமளவில் மாற்றியுள்ளன. இது பாரம்பரிய ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டைச் சற்று எளிதாக்கியிருந்தாலும், அதே சமயம் புதிய சவால்களையும் கொண்டு வந்துள்ளது. இப்போது ஒவ்வொருவரிடமும் சொந்தமாக ஒரு தளம், ஒரு சேனல் அல்லது ஒரு பாட்காஸ்ட் உள்ளது. இந்தியாவில் ஒரு பழமொழி உண்டு.
ஒவ்வொரு தெருவிலும் ஒரு கிரிக்கெட் நிபுணர் இருப்பார். கிராமத்துத் தெருவில் அமர்ந்திருக்கும் ஒருவர் கூட இன்று, யார் என்ன தவறு செய்தார் என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார். இன்று, ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு செய்தி குறித்தும் கருத்து சொல்லும் நிபுணர்கள் உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பத்திரிகையாளர்களை சந்திச்சு பேசுறாரே... புல்லரிக்குது
போதை பொருள் என்ன என்று புரியும்படி சொல்லலாம் . டாஸ்மாக்கில் அமிர்தம் விற்பனையாகிறதா ?
சவுரி..உம்மை.முதலில் எலி கடித்தால் ஓகேவா.இல்லை பாம்பு கடித்தால்.ஓகேவா..முதலில் எதை கொல்ல எண்ணுவீர்.
5 வருசமாக திமுக காரர்கள் குறிப்பாக அமீர் கூட்டாளிகள் போதை பொருள் தயாரித்து ,ஸ்டோர் பண்ணி , டிஸ்ட்ரிபூட் பண்ணி மும்முரமா பிசினஸ் செய்தபோது வேடிக்கை பார்த்தது யார் ?
நல்லா இருக்கே >> பிரதமர், உள்துறை அமைச்சரவை, பிற அமைச்சரவை [10 ஆளும் ஊட்டணி எம்பிக்கு ஒரு அமைச்சராவது இருப்பார்], அவர்களுக்கு கீழே பல அதிகாரிகள் .... இவர்களைத் தவிர போதை ஒழிப்புக்காகவே துறை .... இவங்களால முடியாததை மீடியா செய்யணுமாம் ....
தர்மா உன் கருத்தை முட்டு சந்தில் சொல்லலாமே..எதற்கு இந்த மீடியாவில் சொல்கிறாய்..
அது சரி,,மேலும்
-
மல்லுார் ஊருக்குள் வராத பஸ்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகும் மக்கள்
-
பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
-
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முகூர்த்தக்கம்பம் நடல்
-
29ல் ஜெ., பேரவை கூட்டம் கட்சியினருக்கு அறிவுரை
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி