மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்
-நமது நிருபர்-
மைக்ரோசாப்ட் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 ஆகியவை உலகம் முழுவதும் செயல் இழந்ததை ஐடி நிறுவன ஊழியர்கள் மீம் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
தொழில், வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கு அவுட்லுக் மெயில் சேவை, டீம்ஸ் ஆகியவை அத்தியாவசியம்.
அலுவலக கூட்டங்களுக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் இந்த சேவைகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.
அவற்றின் சேவை இன்று அதிகாலை உலகம் முழுவதும் செயல் இழந்தது. இவற்றுடன் தொடர்புடைய ஓப்பன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஏஐ சேவைகளும் பாதிக்கப்பட்டன.
7 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சேவைகள் இல்லாமல், உலகம் முழுவதும் தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணிகள் முடங்கின.
இதனால் வேலை இன்றி இருந்த பலரும், வலைதளங்களில் மீம் படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
மிஸ்டர் பீன் படங்களில் வரும் கேலிப்படங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
வார இறுதிக்கு முன்னதாக ஒரு நாள் சும்மா விடுமுறை கிடைத்து விட்டதை மதுவுடன் கொண்டாடுவது போலவும், வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வேலை செய்யாத
கம்ப்யூட்டரை தட்டிப்பார்த்து உடைப்பது போலவும், இ-மெயில்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும், வலைதளங்களில் மீம்கள் வெளியாகியுள்ளன. வேலை இல்லாத ஊழியர்கள், அலுவலகங்களில் ஓடிப்பிடித்து விளையாடுவது, பொம்மை துப்பாக்கியால் சுட்டுச்சுட்டு விளையாடுவது போன்ற வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.
13-11-2026 மதியம் 12:15 மணி வரை பிரச்சினை சரி செய்யப்படவில்லை. இன்றைய நாளில் பெரும்பாலான நேரம் மன அழுத்தம் இல்லை. ஆனால் Office 365 சேவைகள் முடக்கத்தால் பல வேலைகள் தற்காலிக தேக்க நிலையில் உள்ளன.
எல்லாம் வல்ல ஆண்டவரே... இதைப் போன்றே.. உலகத்தில் கடல், நிலம், வான்வெளி ஆகியவற்றில்... இன்டர்நெட் கனக்சன் கட்டாக்கிடு ஆண்டவரே...? 900 கோடி மக்களுக்கும் பைத்தியம் பிடித்து... தங்களை தாங்களே தற்கொலை செய்துகொள்வார்கள்.... அந்த இண்டர்நெட் எனும் சகடை சனியன் ஒழிந்தால், மக்கள் ஆரோக்கியத்துடன் அமைதியுடன் சந்தோஷத்துடன் வாழ்வார்கள்... கிருபை செய் ஆண்டவரே...
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! இன்டர்நெட் இப்போது குரங்கு கையில் கிடைத்த பூமாலை! தவறான மனிதர்கள் கையில் அது ஒரு அணுகுண்டு!
அந்தக்காலம் வரும் விரைவில். அப்போதான் நம்மக்கள் ரோட்ல நடப்பானுகமேலும்
-
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்!
-
தீபாவளி நாளில் இந்தியர்கள் ஆர்டர் செய்தவை; காஜூ கட்லிக்கு முதலிடம்
-
உலகம் முழுவதும் பரவி வரும் யோகாவின் செல்வாக்கு; பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
-
4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
கோவை நூலகங்களில் 3,808 போலி புத்தகங்கள் அகற்றம்