பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்!
-நமது நிருபர்-
ஆண்டுதோறும் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு மாணவர்களுக்கு தலைக்கவசம், தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி போன்றவற்றுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது..
இந்த திட்டத்தை செயல்படுத்த 277 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கோரப்பட்டது. பிறகு 5 லட்சத்து 32,388 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவதற்கான டெண்டர் ஹீரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. முதலில் மாணவர் ஒருவருக்கு வரிகள் உட்பட 7,235 ரூபாயிலும், மாணவி ஒருவருக்கு வரிகள் உட்பட 7476 ரூபாயிலும் சைக்கிள்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பிறகு கொள்முதல் விலையை குறைக்க, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 9 கட்டப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. மாணவர்களுக்கான சைக்கிள் ரூ. 5,260 என்ற விலையிலும், மாணவிகளுக்கான சைக்கிள் ரூ. 5,130 என்ற விலையிலும் வழங்க ஹீரோ நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 5 மாதத்தில் சைக்கிள் வழங்கப்படும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்தது.
சிறப்பு வீடியோ!
9 கட்ட பேச்சுக்கு கிடைத்தது பலன்; இறங்கி வந்தது ஹீரோ நிறுவனம்; மாணவ, மாணவியர் சைக்கிள் விலை குறைப்பு!
வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!
விளம்பர வெட்டி செலவு இதுமேலும்
-
தீபாவளி நாளில் இந்தியர்கள் ஆர்டர் செய்தவை; காஜூ கட்லிக்கு முதலிடம்
-
உலகம் முழுவதும் பரவி வரும் யோகாவின் செல்வாக்கு; பெங்களூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
-
4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
கோவை நூலகங்களில் 3,808 போலி புத்தகங்கள் அகற்றம்
-
மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்