4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி!

-நமது நிருபர்-

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு சவாலில் வென்ற இந்தியா,2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி மழையால் ரத்தானது. நான்காவது போட்டி இன்று (நவ. 13), மவுன்ட் மவுங்கனுய், பே ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக வில் யங் மற்றும் டிம் சீபர்ட் களம் இறங்கினர். டிம் சீபர்ட் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆலன் 41 ரன்களும், மிட்செல் 24 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். இறுதியாக 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 333 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணியின் ஆகிப் நபி, குர்னூர் பிரரார், அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அரஷ்தீப் சிங், நமன் திர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

Advertisement