சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை குவித்து வருகிறது: அதிபர் டிரம்ப் கவலை
வாஷிங்டன்: ‘‘அணு ஆயுத பரவலை தடுப்பது குறித்து பேச்சு நடத்த ஒப்புக் கொண்ட மறுநாளே, சீனா மிக தீவிரமாக அணு ஆயுதங்களை விரிவாக்கம் செய்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை எட்டிபிடித்துவிடும்,’’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவின் குவாங்டாங் மாகாணாத்தில் உள்ள ஷென்சென் நகரில் கடந்த 19ம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நடந்தது. அப்போது, அணு ஆயுத பரவலை தடுப்பது குறித்து பேச்சு நடத்த இம்மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், சீனாவின் ராணுவ கட்டமைப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட பென்டகன், ‘கடந்த 2024ம் ஆண்டு நிலவரப்படி 600க்கும் அதிகமான அணு ஆயுதங்களை சீனா வைத்திருந்தது. 2030ம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விடும்’ என கவலை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு சமமாக அணு ஆயுதங்களை சீனா குவித்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.
@block_B@
சீனாவில் நடந்த முத்தரப்பு பேச்சில், ரஷ்ய அதிபர் புடினை பார்த்து புன்னகைத்தபடி கை குலுக்கிய டிரம்ப், ‘அவர் என் நண்பர்’ என குறிப்பட்டார். இதைத்தொடர்ந்து மறுநாள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போதும், புடினுடன் நல்ல நட்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “எங்களை பொறுத்தவரை புடின் ஒரு எதிரி. நிச்சயமாக எங்களுக்கு அவர் ஒரு கொலையாளி. ஏன் அவர் கொலையாளி என்றால், அவர் உக்ரைன் மக்களை கொன்று கொண்டிருக்கிறார். புடினை நண்பராக நடத்துவது ராஜதந்திர அழுத்தத்தை குறைத்து விடும். டிரம்பின் இந்த போக்கு, போர் நிறுத்தத்துக்கு போதுமான அழுத்தத்தை தருவதை விடுத்து, போரை நீடிக்க வைத்துவிடும்,’’ என்றார்.block_B
மேலும்
-
அனிருத் திருமண வரவேற்பில் ஸ்டாலின் - இபிஎஸ் சந்திப்பு
-
ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல் பீர் பாட்டிலால் தாக்கு: 5 பேர் மீது வழக்கு
-
காதலியை சந்திக்க 3,200 கி.மீ., ‘பைக்’கில் பயணித்த முதல்வர்
-
டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி முதலியார்பேட்டையில் சோகம்
-
ரூ.186 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
-
ரயில் மோதி முதியவர் பலி