அனிருத் திருமண வரவேற்பில் ஸ்டாலின் - இபிஎஸ் சந்திப்பு
சென்னை: இசையமைப்பாளர் அனிருத், பிரீமியர் லீக் கிரிக்கெட் அணியான ஹைதராபாத் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யாவை 11ம் தேதி க்ரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் வரவேற்பு விழா சென்னை ஓட்டலில் நடந்தது. இதில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷூம் பங்கேற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அனிருத் - காவ்யா திருமணத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து மடல் அனுப்பியுள்ளார்.
இந்த விழாவில் ஸ்டாலின், இபிஎஸ் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்து பேசினர். இது தொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.