ரூ.186 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
- நமது நிருபர் -
நாடு முழுவதும் விமான நிலையங்கள், சரக்கு முனையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சுங்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய அதிரடி சோதனையில், 186.19 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டில்லி, மும்பை, அகர்தலா, ராஜஸ்தான், பெங்களூரு, மங்களூரு, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில், நடத்தப்பட்ட அடுத்தடுத்த வேட்டைகளில், சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகள், மும்பை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 17.9 கிலோ தங்கம்; 56.43 கிலோ உயர் ரக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்; 15.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெளிநாட்டு கரன்சிகள்; ஐபோன்கள்.
அரிய வகை 'ஷாமோ' கோழி முட்டைகள் என, மொத்தம் 42.42 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லி விமான சரக்கு முனையத்தில், உகாண்டாவில் இருந்து வந்த பார்சலில் இருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் பொதை பொருள், பெங்களூரு விமான நிலையத்தில், 2.94 கோடி ரூபாய் மதிப்பிலான 8.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 71.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 518.2 கிராம் தங்கம்.
மங்களூரு விமான நிலையத்தில், சிப்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 13.33 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.333 கிலோ மெத் ஆம் பெட்டமைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 88.98 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சிக்கின. திரிபுரா மாநிலம் அகர்தலாவில் காரை துரத்தி மடக்கியதில், 80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ மெத்ஆம் பெட்டமைன்; விசாகப்பட்டினத்தில் 8.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலம், கோட்டா அருகே காரின் 'ஸ்டெப்னி' டயருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 32.80 கோடி ரூபாய் மதிப்பிலான 16.43 கிலோ அபின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்
-
அனிருத் திருமண வரவேற்பில் ஸ்டாலின் - இபிஎஸ் சந்திப்பு
-
ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல் பீர் பாட்டிலால் தாக்கு: 5 பேர் மீது வழக்கு
-
காதலியை சந்திக்க 3,200 கி.மீ., ‘பைக்’கில் பயணித்த முதல்வர்
-
டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி முதலியார்பேட்டையில் சோகம்
-
ரயில் மோதி முதியவர் பலி
-
நரிக்குடியில் ரயில் பாலம் அமைக்க எதிர்பார்ப்பு