ரயில் மோதி முதியவர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு- – அம்பாத்துரை ரயில்வே ஸ்டேஷன் இடையே ஜல்லிபட்டி மீனாட்சிபுரம் கிராமத்துக்கு அருகே தண்டவாளத்தில் 60 வயது முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொடைரோடு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.
அதில் காலை 6:00 மணிக்கு அவ்வழியே வந்த நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயில் மோதி இறந்தது தெரிந்தது. முதியவரை பற்றிய விவரங்கள் தெரியாததால் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனிருத் திருமண வரவேற்பில் ஸ்டாலின் - இபிஎஸ் சந்திப்பு
-
ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல் பீர் பாட்டிலால் தாக்கு: 5 பேர் மீது வழக்கு
-
காதலியை சந்திக்க 3,200 கி.மீ., ‘பைக்’கில் பயணித்த முதல்வர்
-
டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி முதலியார்பேட்டையில் சோகம்
-
ரூ.186 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
-
நரிக்குடியில் ரயில் பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement