நரிக்குடியில் ரயில் பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
நரிக்குடி: நரிக்குடியில் திருப்புவனம், காரியாபட்டி மெயின் ரோட்டில் ரயில் ரோட்டை கடக்க காலதாமதம் ஏற்படுவதால், ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக பாசஞ்சர், சரக்கு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ரயில் ரோட்டை ஒட்டி உள்ள ஊர்களுக்கு செல்லும் ரோட்டில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு, நீண்ட நேரம் காத்திருந்து, பின் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அவசரத்திற்கு கூட கடந்து செல்ல முடியாமல் பயணிகள் கடுமையாக சிரமப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் அந்தந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய ரோட்டில் சுரங்க பாலம் அமைக்கப்பட்டு, தற்போது தங்கு தடை இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.
அதே நேரத்தில் நரிக்குடியில் இருந்து திருப்புவனம், காரியாபட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் ரயில் ரோட்டை கடக்க சுரங்கப் பாலமோ, மேம்பாலமோ இல்லாததால் ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். இது முக்கிய ரோடு என்பதால் ஏராளமான வாகனங்கள், கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. வேறு வழியின்றி சில நேரங்களில் பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், நேரம், பணம் விரையம் ஆகிறது. இதை கருத்தில் கொண்டு நரிக்குடியில் ரயில்வே ரோட்டை கடந்து செல்ல ரயில்வே மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
அனிருத் திருமண வரவேற்பில் ஸ்டாலின் - இபிஎஸ் சந்திப்பு
-
ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல் பீர் பாட்டிலால் தாக்கு: 5 பேர் மீது வழக்கு
-
காதலியை சந்திக்க 3,200 கி.மீ., ‘பைக்’கில் பயணித்த முதல்வர்
-
டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி முதலியார்பேட்டையில் சோகம்
-
ரூ.186 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
-
ரயில் மோதி முதியவர் பலி