மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மழைநீர் சேகரிப்பு அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் 400 பேர் பங்கேற்றனர்.

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் இன்று (நவ.,21) பேரணி நடந்தது.

கலெக்டர் துர்கா தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி ஸ்கீம் ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஸ்பென்சர்ஸ் காம்பவுண்ட், நகரின் முக்கிய ரோட்டின் வழியே சென்று மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது.

இதில் பள்ளி, கல்லுாரிகளை என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவது, நீர்வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

Advertisement