வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் திருட்டு

மயிலம்: மயிலம் அருகே உள்ள வாலிபரிடம் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரின் மகன் பிரவீன் 22; இவர் சென்னை, தனியார் நிறுவனத்தில்,பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று (நவ.,21) காலை 11:30 மணிக்கு, கூட்டேரிப்பட்டில் உள்ள வங்கிக்கு, அவரின் பெற்றோர் கொடுத்தனுப்பிய சுய உதவிக் குழுவின் பணம் 90 ஆயிரத்து 300 ரூபாயை கட்ட சென்றார். அந்த வங்கியில் சர்வர் வேலை செய்யாததால் ஊழியர்கள் பணத்தை திரும்ப அவரிடம் கொடுத்து விட்டனர்.

பின்னர் பிரவீன் அந்த பணத்தை அவரது ஸ்கூட்டியின் டிக்கியில் வைத்து பூட்டியுள்ளார். தொடர்ந்து, கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள நோட்டு புத்தகக் கடைக்கு சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டு மறுபடியும் கிராமத்திற்கு செல்வதற்கு பைக் எடுக்க வந்தார். அப்பொழுது ஸ்கூட்டியின் டிக்கி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிந்து. இதுகுறித்து பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement