கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மண், கான்கிரீட் கழிவுகளை அகற்றாமல்,
அவற்றின் மீதே வெள்ளை கோடுகள் வரையப்பட்டதால், மக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
அரவக்குறிச்சி, கோர்ட் சாலையில் இருந்து
தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியாக, தேசிய நெடுஞ்சாலையில்
இணையும் பகுதியில், வெள்ளை கோடுகள் வரையும் பணியில் பணியாளர்கள்
ஈடுபட்டுள்ளனர். கோடு வரைவதற்கு முன்பு, சாலை ஓரங்களில் உள்ள மண்,
கான்கிரீட் கழிவு மற்றும் சிதறி கிடக்கும் பொருட்களை அகற்றி, சுத்தம்
செய்ய வேண்டிய நிலையில், அவற்றை அகற்றாமலேயே பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
சாலையோரத்தில் உள்ள மண்ணை அப்படியே
விட்டுவிட்டு, அதன் மீதே வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது. அதேபோல்,
சாலையோரங்களில் கொட்டப்பட்டிருந்த கான்கிரீட் கலவைகளையும்
அகற்றாமல், அவற்றுக்கு இடையில் கிடைத்த இடங்களில் மட்டும் வெள்ளை
கோடுகளை வரைந்துள்ளனர்.
சாலை பாதுகாப்பிற்காக வரையப்படும்
வெள்ளை கோடுகள், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர,
சாலையோரத்தில் உள்ள மண் மற்றும் கான்கிரீட் கழிவுகளை மறைப்பதற்கான
அலங்காரமாக மாறிவிடக்கூடாது.
எனவே, சம்பந்தப்பட்ட தேசிய
நெடுஞ்சாலைத் துறையினர், இதை கவனத்தில் கொண்டு, சாலையோரங்களில் உள்ள
மண், கான்கிரீட் கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்த பின்னர் கோடுகளை வரைய
வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.