சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே, சீத்தப்பட்டி பழைய காலனி பகுதியில் அமைந்துள்ள சாக்கடை
கால்வாய், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி
மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீத்தப்பட்டி
பழைய காலனியில் உள்ள சாக்கடை கால்வாயில், நீரோட்டத்தை சீராக்கும்
வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, கால்வாயின் ஒரு பகுதியை இடித்ததாக
தெரிகிறது. ஆனால், இடிக்கப்பட்ட பகுதியை மீண்டும் கட்டி முடிக்காமல்
விட்டதால், சாக்கடை நீர் முறையாக செல்லாமல் தேங்கி வழிகிறது.
இதனால்,
500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் கழிவுநீர் வெளியேற முடியாமல்
கால்வாயில் தேங்கி நிற்பதுடன், கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது.
மழை காலங்களில் சாக்கடை நீர் வீடுகளின் முன்புறம் மற்றும்
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இந்த பிரச்னை குறித்து,
இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு
அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாக்கடை
கால்வாய் அருகிலேயே அரசு நுாலகம் உள்ளது. அங்கு செல்லும் மாணவர்கள்,
வாசகர்கள் துர்நாற்றத்தால் தவிக்கின்றனர்.
எனவே, அதிகாரிகள்
உடனடியாக நேரில் ஆய்வு செய்து, இடிக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயை
முழுமையாக சீரமைத்து, அதன் மேற்பகுதியில் பாதுகாப்பு மூடி அல்லது
தடுப்புச் சுவர் அமைத்து, சாக்கடை நீர் தடையின்றி செல்லும் வகையில்
நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு
-
ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி தாசில்தாரிடம் டவுன் பஞ்., மனு
-
தென்னிலை அருகே மினி டிராவல் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
-
மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
-
அரசு வேளாண்மை கல்லுாரி சார்பில் செயல்முறை விளக்கம்