மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
குளித்தலை:குளித்தலை,
பாரதி நகர் பகுதியில் மத்திய அரசின் மீன்வளத் துறையின், நிதி
உதவியுடன் குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம்
சார்பில், மீன் வலை மற்றும் உபகரணங்கள் விற்பனை மையத்தை, திருச்சி
மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் பிரபாவதி,
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருச்சி மண்டல உதவி இயக்குனர்
குமரேசன், கரூர் ஆய்வாளர் கர்ணன், மாயனுார் ஆய்வாளர் அஜய்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், குளித்தலை அருகே
கட்டளை காவிரி ஆற்றில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு வரை, காவேரி
ஆறு தென்பகுதியில் உள்ள, ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை
கொண்ட சங்கத்தினருக்கு, குறைந்த விலையில் வலைகள் மற்றும் மீன்பிடி
உபகரணங்கள் வழங்கவும், இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.
விழாவில் சங்க முன்னாள் தலைவர் மதியழகன், முன்னாள் இயக்குனர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை
-
கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு
-
ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி தாசில்தாரிடம் டவுன் பஞ்., மனு
-
தென்னிலை அருகே மினி டிராவல் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
-
மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
-
அரசு வேளாண்மை கல்லுாரி சார்பில் செயல்முறை விளக்கம்