இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் பெற்று தருவதாக ரூ.31.54 லட்சம் மோசடி

தேனி: மதுரையில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரர் உட்பட 8 பேரிடம் ரூ.31.54 லட்சம் மோசடி செய்த ராஜ் நாராயணன் 42, மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே வடபுதுப்பட்டி நுாலக தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சசிகுமார் 47. இவர் தனது மகளுக்கு இன்ஜினியரிங் சீட் வாங்க முயன்றார். அப்போது மதுரை கே.புதுரை சேர்ந்த ராஜ் நாராயணன் அறிமுகம் ஆனார். மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4.83 லட்சத்தை 2 மாதங்கள் முன் பெற்றார். ஆனால் சீட் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, முறையாக பதில் கூறாமல் ஏமாற்றினார். ஏமாற்றப்பட்டதை அறிந்த சசிகுமார், தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்.பி., பிரவீன் கவுதம் உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சசிகுமார் உட்பட தேனியை சேர்ந்த 8 பேரிடம் இன்ஜினியரிங் சீட் தருவதாக கூறி மொத்தம் ரூ.31.54 லட்சத்தை ராஜ் நாராயணன் மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement