நிறுவன செய்திகள்
இந்தியாவில் 20,000 கார்களை விற்பனை செய்தது பி.ஒய்.டி.,
இந்தியாவில், சீனாவின் பி.ஒய்.டி., நிறுவனம் விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்திய மின்சார கார் சந்தையில் 2021ல் நுழைந்த இந்நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் வரை 10,000 கார்களை மட்டும் இந்நிறுவனம் விற்றிருந்த நிலையில், ஓராண்டில் விற்பனை இரு மடங்காகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு, நாடு முழுதும் 51 விற்பனை மையங்கள் உள்ளன.
மே. வங்கத்துக்கு மின்சாரம் அதானி எனர்ஜி ஒப்பந்தம்
மேற்கு வங்க அரசின் மின்பகிர்மான நிறுவனத்திற்கு, 25 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக 2,500 மெகா வாட் மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பவர்பல்ஸ் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பெற்றுள்ளது. முதற்கட்டமாக 1750 மெகா வாட் மின் வினியோகம், 2028 ஜூலை 1ம் தேதி துவங்கும்.
அடுத்த கட்ட வினியோகம், 2029 ஏப்ரல் 1ம் தேதி துவங்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விற்பனை 8 - 10% உயரும் ஜே.எம்., பைனான்சியல் கணிப்பு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் வாகன விற்பனை 8 - 10 சதவீதம் அதிகரிக்கும் என, ஜே.எம்., பைனான்சியல் கணித்துள்ளது. ஜூலை - செப்., காலாண்டில் வாகன விற்பனை 21 சதவீதம் உயர்ந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் 39, பயணியர் கார்கள் 27, இருசக்கர வாகனங்கள் 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.
மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், விற்பனை அதிகரிப்பது
நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சியை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஆடை ஆலை அமைக்கிறது 'ஆபிசினஸ்'
ஆந்திர பிரதேசத்தில் தனது ஆடை தயாரிப்பு தொழிலை விரிவுபடுத்த,
'ஆபிசினஸ்' நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக, ஆந்திர பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் வாயிலாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆலையில் அதிக அளவில்
பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் 15,000 'இ85' பைக்குகள் விற்பனை
ஹீரோ நிறுவனம், கடந்த இரு மாதங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'இ85' எத்தனால் கலப்பு எரிபொருள் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூனில் அறிமுகமான 'ஸ்பிளெண்டர் பிளஸ் பிளக்ஸ்', 'எச்.எப்., டீலக்ஸ் பிளக்ஸ்' ஆகிய பைக்குகள், இ20 முதல் இ85 வரையிலான பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டவை.
இ85 எரிபொருள் பரவலாக கிடைக்காத நிலையிலும், விற்பனை அதிகரித்துள்ளது. மாடல் வாரியான விற்பனை விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.



மேலும்
-
காய்கறி நாற்று விற்பனை விவசாயிகள் மும்முரம்
-
க.பரமத்தியில் பாலசுப்பிரமணிய சுவாமிகளின் குருபூஜை விழா
-
மழைநீர் சேகரிப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி
-
ஆற்று மணல் பதுக்கிய வாலிபர் மீது வழக்கு
-
போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் பாதியில் நிற்கும் ஆர்.டி.ஓ., கட்டட பணி
-
வெறிநாய் கடித்ததில் 15க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை