அரசு வேளாண்மை கல்லுாரி சார்பில் செயல்முறை விளக்கம்

கரூர்:கரூர் அரசு வேளாண்மை கல்லுாரி சார்பில், கோனோ வீடர் குறித்த, செயல்முறை விளக்கம் ஜெகதாபி கிராமத்தில் நடந்தது.

அதில், நெல் வயல்களில் வரிசையாக நடவு செய்யப்பட்ட பயிர்களைகளை எப்படி கட்டுப்படுத்துவது, களை எளிதாக அகற்றும் முறைகள், தொழிலாளர் தேவையை குறைத்தல், மண்ணில் காற்றோட்டத்தை அதிகரித்தல், சாகுபடி செலவை குறைத்தல் உள்ளிட்ட, பணிகள் குறித்து வேளாண்மை கல்லுாரி மாணவி பவிஷ்ணவி விளக்கம் அளித்து பேசினார்.

தொடர்ந்து, வேளாண்மை கல்லுாரி மாணவியர், செய்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர். அதில், ஜெகதாபி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement