தென்னிலை அருகே மினி டிராவல் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அரவக்குறிச்சி:கரூரிலிருந்து
திருப்பூர் நோக்கி சென்ற மினி டிராவல்ஸ் பஸ், கட்டுப்பாட்டை இழந்து
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுனர் சிறிய காயங்களுடன்
உயிர் தப்பினார்.
கரூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில், புதிதாக
தயாரிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த மினி டிராவல்ஸ் பஸ், திருப்பூர்
நோக்கி காலை 11:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை
திருப்பூரை சேர்ந்த அரவிந்த், 26, என்பவர் ஓட்டிச் சென்றார். கோவை
சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கரைப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே,
கார் ஒன்று திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் மினி
பஸ்சை ஓட்டிச் சென்ற அரவிந்த், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல்
போனதால், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில்,
அரவிந்த் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை
மேற்கொண்டனர். மேலும், பள்ளத்தில் கவிழ்ந்த மினி டிராவல்ஸ் பஸ்சை
மீட்டனர்.
மினி டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
-
இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை