மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
குளித்தலை:குளித்தலை
அடுத்த இனுங்கூர் பஞ்., சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
பேரணி நடந்தது. குளித்தலை ஒன்றிய ஆணையரும், தனி அலுவலருமான
ராஜேந்திரன் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, பஞ்., செயலாளர் பன்னீர்செல்வம்,
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.பேரணியில், மழைநீர் சேகரிப்பு துண்டு பிரசுரங்களை
பஞ்., துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் பொதுமக்களுக்கு
வழங்கினர். இனுங்கூர் பகுதியில் முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி, அரசு
மேல்நிலைப்பள்ளி வந்தடைந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட
பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதேபோல், மணத்தட்டை பஞ்.,ல்,
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தனி அலுவலர்
ராஜேந்திரன் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, பஞ்., செயலாளர் ராஜ்கண்ணன்,
தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் துர்கா, கீதா மற்றும் பள்ளி
மாணவர்கள், பஞ்., துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள்
கலந்துகொண்டனர்.
மேலும்
-
நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
-
இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை