ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி தாசில்தாரிடம் டவுன் பஞ்., மனு
ப.வேலுார்:ப.வேலுார்
செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், ஆக்கிரமிப்புகளை அகற்றி
தரக்கோரி, ப.வேலுார் தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த
மனுவில் தெரிவித்திருப்பதாவது: ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட
பஞ்சமுக விநாயகர் கோவில் எதிர்புறம் தனியார் வங்கி மற்றும் ஏராளமான
வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள
மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வடிகால்கள் மீதும்,
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார்சாலையை ஆக்கிரமித்தும்
வணிகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கடைகளுக்கு
வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி
செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து
நெரிசல் ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும்
தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள்
தரப்பில் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து,
ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு
சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு டவுன் பஞ்., சார்பில், இரண்டு
முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருப்பினும், ஆக்கிரமிப்பாளர்கள்
எவரும் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.எனவே, மழைநீர்
வடிகால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, டவுன் பஞ்., நிர்வாகம் இடங்களை
ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை அகற்றும் வகையில், சர்வேயர் மூலம்
அளவீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.