ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்
போடி: போடி கொட்டகுடி ஆற்றின் கரையோரத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் கண்மாய்களுக்கு மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
போடி மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சி புரம் உட்பட சுற்றி உள்ள கிராம மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக மேற்கொண்டுள்ளனர். கேரள, குரங்கணி பகுதியில் பெய்யும் மழை நீரானது கொட்டகுடி ஆற்றில்செல்கிறது. இந்த ஆறு குரங்கணியில் துவங்கி தேனி வரை செல்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகள், போர்வெல்கள் பயனடைகின்றனர். இது தவிர சில கண்காய்களுக்கும் நேரடியாக தண்ணீர் செல்கிறது.
கொட்டக்குடி ஆற்றில் போடி அணைப்பிள்ளையார் அணை, இரட்டை வாய்க்கால், வேட்ட கருப்பசாமி கோயில், கோடாங்கிபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இரு கரையோரத்திலும் ஆக்கிரமித்து தென்னை, இலவம் சாகுபடி செய்துள்ளனர்.இதனால் பாதை குறுகலாகி மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் ஆற்றில் இருந்து போடி பங்காருசாமி, சங்கரப்பன், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய்களுக்கு மழைநீர் முழுவதும் செல்லும் வாய்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. கொட்டக்குடி ஆற்றில் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களில் மழைநீர் தேக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
-
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கப்படுமா?
-
காவல்துறையில் சர்விவல் டவர் திருவண்ணாமலையில் அறிமுகம்
-
போலியோ சொட்டு மருந்து முகாம் 1144 மையங்களில் துவக்கம்
-
தனியார் பள்ளிகளுக்கு ரூ.400 கோடி ஆர்.டி.இ., கட்டணம் நிலுவை
-
நில மோசடி வழக்கில்மேலும் ஒருவர் கைது