மின் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் கடலுார் மாவட்டம் சிறப்பு கருத்தரங்கு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

சேத்தியாத்தோப்ப தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிவேல், பொருளாளர் சுப்ரமணியன், மண்டல அறக்கட்டளை செயலாளர் தட்சிணாமூர்த்தி , ராமதுரை, சண்முகசுந்தரம் ் முன்னிலை வகித்தனர்.

சேத்தியாத்தோப்பு கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சேலம் கோவிந்தன் கேற்று மின் அமைப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுடன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், சங்கத்தில் உள்ள மின் அமைப்பாளர்கள் மற்றும் தனியார் மின் அமைப்பாளர்கள் அனைவரும் கட்டுமான நலவாரியத்தில் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்,நலவாரிய உதவிகளை சஙகத்தின் வாயிலாக உறுப்பினர்களுக்கு அவசியம் பெற்று தருதல். குடும்ப நல அறக்கட்டளையில் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement