தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் நீர்மட்டம் உயர்ந்து, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், நவபாஷாண கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் கோயில் அமைந்துள்ளது. இங்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கடல் பகுதியில், சில தினங்களாக வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அவ்வப்போது கடல் நீர்மட்டம் உயர்வதும் குறைவதுமாக இருந்து வந்தது. நேற்று காலை முதல் கடல் நீர்மட்டம் நவகிரகங்களை மூடும் அளவிற்கு உயர்ந்ததுடன், நவக்கிரக நடைமேடை வரை நீர்மட்டம் பரவியது. இதனால், கடல் பகுதியில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கயிறு கட்டப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நடைமேடை வழியாக தரிசனம் செய்தனர். வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், கடல் சீற்றமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
-
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கப்படுமா?
-
காவல்துறையில் சர்விவல் டவர் திருவண்ணாமலையில் அறிமுகம்
-
போலியோ சொட்டு மருந்து முகாம் 1144 மையங்களில் துவக்கம்
-
தனியார் பள்ளிகளுக்கு ரூ.400 கோடி ஆர்.டி.இ., கட்டணம் நிலுவை
-
நில மோசடி வழக்கில்மேலும் ஒருவர் கைது