சேதமடைந்த நிலையில் துத்திநத்தம் சாலை
பெருநாழி: பெருநாழி அருகே துத்திநத்தம் கிராமத்தில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் புதுார் ஒன்றியத்துக்கு செல்லும் சாலை 2 கி.மீ., தொலைவிற்கு சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைசி எல்லை கிராமமான துத்தி நத்தம் கிராமச் சாலை பல இடங்களில் சேதமடைந்தும் குண்டும் குழியுமாக உள்ளது.
மழை காலங்களில் சேறும் சகதியுகமாக உள்ளதால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் கூறியதாவது: சாலை அமைத்து 20 ஆண்டுகள் ஆகிறது. புதிய சாலை அமைக்க பலமுறை மனுக்கள் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே மாவட்டத்தின் கடைசி எல்லையான துத்தி நத்தத்திற்கு கமுதி யூனியன் சார்பில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
-
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கப்படுமா?
-
காவல்துறையில் சர்விவல் டவர் திருவண்ணாமலையில் அறிமுகம்
-
போலியோ சொட்டு மருந்து முகாம் 1144 மையங்களில் துவக்கம்
-
தனியார் பள்ளிகளுக்கு ரூ.400 கோடி ஆர்.டி.இ., கட்டணம் நிலுவை
-
நில மோசடி வழக்கில்மேலும் ஒருவர் கைது
Advertisement
Advertisement