பாதாள சாக்கடை மேன்ேஹாலில் கழிவுநீர் வெளியேறுவதால் அவதி

விழுப்புரம்: பாதாள சாக்கடை மேன்ேஹாலில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் வாகன ஓட்டிகள், குடியிருப்பு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சி பானாம்பட்டு சாலை வழியாக பானாம்பட்டு, பில்லுார், ஆனாங்கூர், நன்னாட்டாம்பாளையம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

இச்சாலையில் பானாம்பட்டு ரயில்வே கேட் அருகில் பாதாள சாக்கடை மேன்ேஹாலில் இருந்து சில தினங்களாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, குடியிருப்பு மக்கள் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement