கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 22, கூலி தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். கடந்த 20ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கொளத்துாரில், பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் அலெக்சாண்டர் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின்படி, மருவத்துார் போலீசார் அலெக்சான்டர் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement